பல்கலைக்கழகம் எதிரே கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற தமிழக வாலிபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது..
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகம் எதிரே உள்ள சலூனில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.புத்தாண்டு அன்று நள்ளிரவு கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் திருடு போனதாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில்,காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் முன்பு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெரிய காலாப்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேலம் மாவட்டம் ஜரிகொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்த கோகுல்(24)என்பதும், அவர் ஓட்டி வந்தது ரஞ்சித் குமாரின் மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments